நாடாளுமன்றத் தேர்தலில் விளாடிமிர் புடினின் 'யுனைடெட் ரஷ்யா' கட்சி பெரு வெற்றி!

ரஷ்யாவில் நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் ஜனாதிபதி விளாடிமிர் புடினின் 'யுனைடெட் ரஷ்யா' கட்சி பெரு வெற்றியை பெற்றுள்ளது.
அந்தக்கட்சி, 58%க்கும் அதிகமான வாக்குகளைப் பெற்று, நாடாளுமன்றத்தின் நான்கில் மூன்று பங்கு இடங்களைக் கைப்பற்றியுள்ளது
நாடாளுமன்றத்தில் உள்ள 450 இடங்களில் சுமார் 355 இடங்களைக் கைப்பற்றி, யுனைடெட் ரஷ்யா கட்சி சாதனை படைத்துள்ளது.
இந்த நிலையில், கம்யூனிஸ்ட் கட்சி 13.8% வாக்குகளுடன் 40 இடங்களையும், எல்.டி.பி.ஆர் (LDPR) கட்சி 25 இடங்களையும், 'நியூ பீப்பிள்' கட்சி 20 இடங்களையும் பெற்றுள்ளன.
2022-இல் யுக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்த பிறகு நடைபெற்ற முதல் நாடாளுமன்றத் தேர்தல் இதுவாகும்.
அத்துடன், யுக்ரைனிலிருந்து ஆக்கிரமிக்கப்பட்டு இணைக்கப்பட்ட நான்கு பிராந்தியங்களின் மக்களும் இந்த தேர்தலில் முதன்முறையாக வாக்களித்தனர்.
அதேநேரம் ரஷ்யாவின் ஒரே அதிகாரப்பூர்வப் போர் எதிர்ப்புச் சார்ந்த கட்சியான,'யாப்லோகோ' ரஷ்ய உயர் நீதிமன்றத்தால் தேசிய அளவிலான வேட்பாளர் பட்டியலிலிருந்து நீக்கப்பட்டது.
எனினும், நோவ்கோரோட் பிராந்தியத்தில் அந்த கட்சி 6% வாக்குகளைப் பெற்றுத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையில், ஐரோப்பிய ஒன்றியம், அவுஸ்திரேலியா, பிரிட்டன், கனடா உள்ளிட்ட நாடுகள் இந்த தேர்தலைப் போலித் தேர்தல் எனக் கடுமையாக விமர்சித்துள்ளன.




