நோர்வே மன்னருக்காக 400 மில்லியன் ஆண்டுகள் பழைமை வாய்ந்த பச்சை நிற கல்லில் செய்யப்பட்ட சவப்பெட்டி!

நோர்வே மன்னர் ஐந்தாம் ஹாரால்ட், வைக்கிங் காலக்கட்ட அடக்க மரபைப் பிரதிபலிக்கும் வகையில் கப்பல் வடிவில் வடிவமைக்கப்பட்ட பிரத்தியேக சவப்பெட்டியில் நல்லடக்கம் செய்யப்பட்டுள்ளார்.
நோர்வேயின் மேற்குப் பகுதியில் வெட்டியெடுக்கப்பட்ட, சுமார் 400 மில்லியன் ஆண்டுகள் பழமையான ஒலிவைன் எனப்படும் பச்சை நிறப் பாறையைக் கொண்டு இந்தச் சவப்பெட்டி உருவாக்கப்பட்டுள்ளது.
கரியமில வாயுவை உறிஞ்சும் தன்மையைக் கொண்ட இந்த ஒலிவைன் பாறை, மன்னர் ஹாரால்ட் மற்றும் அவரது மனைவி அரசி சோஜா ஆகியோர் இயற்கை மீதும் எதிர்காலத் தலைமுறையினர் மீதும் கொண்டிருந்த அக்கறையைக் குறிக்கும் வகையில் தேர்ந்தெடுக்கப்பட்டதாக அரண்மனை தெரிவித்துள்ளது.
மேலும் கப்பல் வடிவிலான இந்த வடிவமைப்பு, வைக்கிங் மரபைப் பின்பற்றுவதோடு மட்டுமல்லாமல் கடல் மீது மன்னர் கொண்டிருந்த ஈர்ப்பையும் வெளிப்படுத்துகிறது.
இருவருக்காக வடிவமைக்கப்பட்டுள்ள இந்தச் சவப்பெட்டியில் அரசி சோஜாவுக்கும் இடம்ஒதுக்கப்பட்டுள்ளது. சுமார் 20 மில்லியன் நோர்வே குரோனர் செலவில் உருவாக்கப்பட்ட இந்தச் சவப்பெட்டி, ஓஸ்லோ நகரில் அமைந்துள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க அகர்ஷாஸ் கோட்டையின் அரசக் கல்லறையில் வைக்கப்பட்டுள்ளது.
இதே வளாகத்தில்தான் மன்னர் ஹாரால்டின் தாத்தா, பாட்டி மற்றும் தாத்தாவின் பெற்றோரது கல்லறைகளும் அமைந்துள்ளன.




