SuperTopAds

சிரியாவில் ஆயுதக் கிடங்கு ஒன்றில் சக்திவாய்ந்த வெடிப்பு!

ஆசிரியர் - Editor IV
சிரியாவில் ஆயுதக் கிடங்கு ஒன்றில் சக்திவாய்ந்த வெடிப்பு!

சிரியாவின் ஆயுதக் கிடங்கு ஒன்றில் சக்திவாய்ந்த வெடிப்பு சம்பவங்கள் பதிவாகியுள்ளன.

இந்த சம்பவத்தில் குறைந்தது நான்கு பேர் காயமடைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

அத்துடன் பொதுமக்கள் அந்தப் பகுதிக்குச் செல்வதைத் தவிர்க்குமாறு அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.

குறித்த இராணுவ முகாமில் இன்று காலை இந்த வெடிவிபத்துகள் நிகழ்ந்ததாக சிரியாவின் அதிகாரப்பூர்வ SANA செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

இந்த விபத்தில் காயமடைந்த 4 பேரை மீட்புப் படையினர் மீட்டுள்ளதாக அலப்போவின் குடிமைப் பாதுகாப்புப் பிரிவுத் தலைவர் பைசல் முகமது அலி தெரிவித்தார்.

வெடிப்பு சம்பவத்துக்கான காரணம் உடனடியாகத் தெரியவரவில்லை.

எனினும் பாதுகாப்பு கருதி அப்பகுதிக்குச் செல்லும் வீதிகள் மூடப்பட்டுள்ளன.

பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம் என்றும், மருத்துவமனைகள் மற்றும் அவசரகாலக் குழுக்கள் முழு எச்சரிக்கையுடன் இருப்பதாகவும் அலப்போ ஆளுநர் அசாம் அல்-கரிப் தெரிவித்துள்ளார்.

ஆரம்ப வெடிவிபத்தைத் தொடர்ந்து அடுத்தடுத்து பல சத்தங்கள் கேட்டதாகவும், பல கிலோமீட்டர் தூரத்திற்கு வெடிப்புச் சத்தம் கேட்டதாகவும் சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

Radio