SuperTopAds

சர்வதேச முதலீட்டு மோசடி வலையமைப்பு இஸ்தான்புல் அரசால் முறியடிப்பு!

ஆசிரியர் - Editor IV
சர்வதேச முதலீட்டு மோசடி வலையமைப்பு இஸ்தான்புல் அரசால் முறியடிப்பு!

துருக்கியை மையமாகக் கொண்டு இயங்கி வந்த சர்வதேச முதலீட்டு மோசடி வலையமைப்பு ஒன்றை இஸ்தான்புல் அரசு வழக்கறிஞர்கள், தேசிய உளவுத்துறை மற்றும் இன்டர்போல் இணைந்து அதிரடியாக முறியடித்துள்ளனர்.

​இஸ்ரேலிய நபர்களின் கட்டுப்பாட்டில் இயங்கியதாகக் கூறப்படும் இந்த நெட்வொர்க், உலகெங்கிலும் உள்ள முதலீட்டாளர்களைப் போலி கிரிப்டோகரன்சி மற்றும் அந்நிய செலாவணி  திட்டங்கள் மூலம் ஏமாற்றி 3 பில்லியன் டாலருக்கும் அதிகமான தொகையை மோசடி செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

​இஸ்தான்புல் மற்றும் முகிலா பகுதிகளில் மேற்கொள்ளப்பட்ட சோதனைகளில் 9 இஸ்ரேலியர்கள் உட்பட 191க்கும் மேற்பட்ட சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதுடன், பில்லியன் கணக்கிலான சொத்துக்கள் மற்றும் சொகுசு வாகனங்கள் முடக்கப்பட்டுள்ளன.

மேலும், இவர்கள் இஸ்ரேல் மற்றும் அமெரிக்க குடிமக்களைத் தவிர்த்து ஏனைய உலக நாடுகளின் முதலீட்டாளர்களை மட்டுமே இலக்கு வைத்து இம்மாபெரும் மோசடியை அரங்கேற்றியுள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

Radio