SuperTopAds

த.தே.கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினா்களிடம் உண்மையை விளக்கி அரசியல் கைதிகள்..

ஆசிரியர் - Editor I
த.தே.கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினா்களிடம் உண்மையை விளக்கி அரசியல் கைதிகள்..

சிறையில் வாடும் கைதிகளைத் தவிர வெளியில் கைதிகளிற்காக அனைவரும் குரல் கொடுக்கலாம் ஆனால் எமது சார்பாக எனக்கூறி எவரையும் குறைகூறும் அதிகாரத்தை நாம் யார்வசமும் ஒப்படைக்கவில்லை. 

எனவே அதனை கருதாது எமது விடுதலைக்கு தொடர்ந்தும் ஆக்கபூர்வமான செயல்பாடுகளை முன்னெடுக்க வேண்டும். என மகசீன் சிறைக் கைதிகள் வேண்டிக கொண்டதாக

 தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் இ.சாள்ஸ் நிர்மலநாதன் தெரிவித்தார்.

மகசீன் சிறையில் உள்ள தமிழ் அரசியல் கைதிகள் 42 பேரையும் நேற்றைய தினம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களான இ. சாள்ஸ் நிர்மலநாதன் மற்றும் சி.சிறிதரன் ஆகியோர் சென்று சந்தித்திருந்தனர். 

குறித்த சந்திப்புத் தொடர்பில் கருத்து கீறும்போதே மேற்கண்டவாறு தெரிவித்தார். இது தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர் மேலும் விபரம் தெரிவிக்கையில்.

அனைத்து வகையான தமிழ் அரசியல் கைதிகளான 107 பேரையும் ஒரே வகையில் மன்னிப்பின் கீழ் குறுகிய கால புனர்வாழ்வு மூலம் விடுவிக்க வேண்டும். 

ன்பதே எமது விருப்பம்.  அதற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு முழு முயற்சியினை மேற்கொள்ள வேண்டும். அதேநேரம் அவ்வாறு மேற்கொள்ளும் முயற்சிகளின் முன்னேற்றத்தை எதிர்வரும் வெள்ளிக் கிழமை எமக்கும் அறியத் தரவும். 

வெளியில் இருந்து பலரும் கூறும் கருத்துக்கள் அவர்களது நிலைப்பாடு . எமக்கு வேண்டிய எமது விடுதலையே ஆகிம் என அவர்கள் கோரிக்கை விடுத்தனர். என்றார்.