ஈரானியர்கள் ஆயுதம் ஏந்தத் தயார் - அரசின் ஏற்பாட்டில் மாபெரும் பேரணி!

தெஹ்ரானில் ஆயிரக்கணக்கான ஈரானியர்கள் ஆயுதம் ஏந்தத் தயார் எனச் சபதமிட்டு, அரசின் ஏற்பாட்டில் மாபெரும் எதிர்ப்புப் பேரணியில் பங்கேற்றுள்ளனர்.
வெள்ளிக்கிழமை நடைபெற்ற இந்தப் பேரணியில் ஈரானிய அரசு புதிதாக உருவாக்கப்பட்ட தன்னார்வப் படையை அறிமுகப்படுத்தியுள்ளது.
ஈரானின் இஸ்லாமிய புரட்சிகர காவல்படை மற்றும் பாசிஜ் (Basij) துணை ராணுவப் படைக்கு கூடுதல் பாதுகாப்பு அடுக்காகச் செயல்படும் இந்தப் படைக்கு, குறிப்பிட்ட அளவிலான இராணுவ மற்றும் அவசரகால மீட்புப் பயிற்சிகள் வழங்கப்படவுள்ளன.
தெஹ்ரான் வீதிகளில் ராணுவ உடைகளில் அணிவகுத்த தன்னார்வலர்கள், கொடிகளையும் ஆயுதங்களையும் ஏந்திச் சென்றனர்.
இதனுடன் அரசு தரப்பில் ஆளில்லா வானூர்திகள், வான்வழித் தடுப்புக்கள் உட்பட்ட பிற ஆயுதங்களும் காட்சிப்படுத்தப்பட்டன.
தலைநகரில் நடைபெற்ற இந்த நிகழ்வில் 313,000 பேர் கலந்துகொண்டதாக ஈரானிய அதிகாரிகள் தெரிவித்தனர்.
புதிய இயக்கம்: "ஜான்பதா-ஏ-ஈரான்" என்ற ஈரானுக்காக உயிர் தியாகம் செய்பவர்கள் என்ற இந்த தன்னார்வ இயக்கத்தில் 600,000 க்கும் அதிகமானோர் பதிவு செய்துள்ளதாகத் தெஹ்ரானின் IRGC தலைவர் ஹசன் ஹஸன்ஸாதே தெரிவித்தார்.
இதில் ஒரு மில்லியனுக்கும் அதிகமானோர் பயிற்சி பெறுவார்கள் என்றும் எதிர்பார்க்கப்படுவதாக ஹசன் ஹஸன்ஸாதே தெரிவித்துள்ளார்.
ஈரானிய ஜனாதிபதி மசூத் பெசெஷ்கியன் (Masoud Pezeshkian) மற்றும் பாசிஜ் தலைவர் ஹொசைன் தைப் (hossein Taeb) உள்ளிட்ட மூத்த தலைவர்கள் இந்தப் பேரணியில் கலந்துகொண்டனர்.
அமெரிக்கக் கடற்படை முற்றுகை மற்றும் புதிய அமெரிக்கத் பொருளாதாரத் தடைகளால் ஈரானியப் பொருளாதாரம் பெரிதும் சிரமப்பட்டு வரும் காலகட்டத்திலேயே இந்தப் பேரணி நடைபெற்றுள்ளது.




