துருக்கி அதிபர் அர்துகான் காசாவிற்குள் காலடி வைக்க முடியாது - இஸ்ரேல்!

துருக்கி அதிபர் அர்துகானை கடுமையாக விமர்சித்துள்ளார் இஸ்ரேல் பாதுகாப்பு அமைச்சர் இஸ்ரேல் காட்ஸ், அர்துகான் காசாவிற்குள் காலடி வைக்க முடியாது என்றும் கூறியுள்ளார்.
மேலும் காசா ஹமாஸ் அமைப்பினருக்கு உதவ நினைத்தால் அவர்களைத் துருக்கியின் அண்டாலியா நகரத்திற்கு அழைத்துச் சென்று தங்க வைக்கலாம் என்றும் தெரிவித்ததுடன் அங்கு இஸ்ரேலிய சுற்றுலாப் பயணிகள் வருகை குறைந்ததால் அதிக இடங்கள் காலியாக உள்ளதாகவும் காட்ஸ் கூறியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.




