இஸ்ரேல் சிறையிலுள்ள கர்ப்பிணிச் சிறைவாசிகளின் நிலை குறித்து உலகளாவிய ரீதியில் கவலை!

இஸ்ரேலின் நிர்வாகக் காவலில் வைக்கப்பட்டிருந்த 35 வயதான பாலஸ்தீன கைதி டானா ஜூடா, செப்டம்பர் 14 அன்று பெண் குழந்தையைப் பிரசவித்துள்ளார்.
மூன்று மாத கர்ப்பிணியாகக் கைது செய்யப்பட்ட அவருக்கு, முறையான மருத்துவ சிகிச்சையோ ஊட்டச்சத்தோ வழங்கப்படவில்லை எனப் புகார் எழுந்துள்ளது.
இதன் மூலம் சிறையிலுள்ள பிற கர்ப்பிணிச் சிறைவாசிகளின் நிலை குறித்து உலகளாவிய கவலை அதிகரித்துள்ளது.




