6 முதலீட்டு நிதிகளைக் கலைக்க துருக்கியின் மூலதனச் சந்தை வாரியம் ஒப்புதல்!

ஈரானுடன் தொடர்புடைய வணிக நடவடிக்கைகளில் ஈடுபட்டதாகக் கூறி, துருக்கியின் கோல்டன் குளோபல் போர்ட்ஃபோய் நிறுவனம் நிர்வகித்து வந்த 6 முதலீட்டு நிதிகளைக் கலைக்க துருக்கியின் மூலதனச் சந்தை வாரியம் ஒப்புதல் அளித்துள்ளது.
அமெரிக்காவின் பொருளாதாரத் தடைகளைத் தொடர்ந்து, அந்நிறுவனத்தின் 99.98% பங்குகளை துருக்கி அரசு தனது கட்டுப்பாட்டில் எடுத்துள்ளது.




