SuperTopAds

காசா பாலஸ்தீன மக்களுக்கு மட்டுமே சொந்தமானது - சீன வெளியுறவு அமைச்சு!

ஆசிரியர் - Editor IV
காசா பாலஸ்தீன மக்களுக்கு மட்டுமே சொந்தமானது - சீன வெளியுறவு அமைச்சு!

காசா பகுதி பாலஸ்தீன மக்களுக்கு மட்டுமே சொந்தமானது என்றும், அதனை அரசியல் பேரப் பொருளாகவோ அல்லது இராஜதந்திர சவூதாகவோ பயன்படுத்தக் கூடாது என்றும் சீன வெளியுறவு அமைச்சு மீண்டுமொருமுறை திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது.

​மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவி வரும் பதற்றங்கள் மற்றும் மோதல்கள் குறித்துக் கருத்துத் தெரிவித்துள்ள சீன வெளியுறவுத்துறை அதிகாரிகள், காசா விவகாரம் மற்றும் பரந்த பிராந்திய நெருக்கடிகள் அனைத்தும் அமைதியான தூதரக வழிகளிலேயே தீர்க்கப்பட வேண்டும் என சுட்டிக்காட்டியுள்ளனர்.

சர்வதேச விதிகளுக்கு அமைவாக பேச்சுவார்த்தைகள் மற்றும் இராஜதந்திர முயற்சிகள் மூலம் மட்டுமே பாலஸ்தீனப் பிரச்சினக்கு நிரந்தர அரசியல் தீர்வைக் காண முடியும் என்றும் சீனா மீண்டும் வலியுறுத்தியுள்ளது.

Radio