ஈரான் மீது தாக்குதல் நடத்த அயல்நாடுகள் அனுமதிக்கக் கூடாது - ஈரான் அதிபர்!

அமீரகம் உள்ளிட்ட பிராந்திய நாடுகள் அனைத்தும் எங்களது சகோதர நாடுகள் என்றும், அந்நாடுகளுடன் ஈரான் எவ்வித பகையுமின்றி சுமூக உறவைக் கொண்டுள்ளதாகவும் ஈரான் அதிபர் மசூத் பெசெஷ்கியான் தெரிவித்துள்ளார்.
ஆனால், அந்த நாடுகளில் அமைந்துள்ள அமெரிக்க ராணுவத் தளங்கள் மூலமே ஈரான் மீது தாக்குதல்கள் நடத்தப்பட்டு வருகின்றன.
எனவே, எதிரிகள் தங்கள் மண்ணைப் பயன்படுத்தி ஈரான் மீது தாக்குதல் நடத்த அயல்நாடுகள் அனுமதிக்கக் கூடாது என அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.




