இலட்சக்கணக்கான பாலஸ்தீன மாணவர்கள் அடிப்படை வசதிகள் எதுவுமின்றி அவதி!

காஸாவில் புதிய கல்வியாண்டு தொடங்கியுள்ள நிலையில், பெரும்பாலான பாடசாலை கட்டிடங்கள் அகதிகளின் முகாம்களாக மாறியுள்ளன.
இதனால் இலட்சக்கணக்கான பாலஸ்தீன மாணவர்கள் பாடநூல்கள் மற்றும் அடிப்படை வசதிகள் எதுவுமின்றி தற்காலிக கூடாரங்களில் தங்களது கல்வியைத் தொடரும் அவலநிலை நீடித்து வருகிறது.




