இஸ்ரேல் நடத்திய வான்வழி தாக்குதலில் 10 பாலஸ்தீனர்கள் பலி!

காசா பகுதியில் கடந்த 48 மணி நேரத்தில் இஸ்ரேல் நடத்திய வான்வழி மற்றும் எறிபடைத் தாக்குதல்களில் 10 பாலஸ்தீனர்கள் கொல்லப்பட்டுள்ளதாக பாலஸ்தீன சுகாதார அமைச்சகம் உறுதி செய்துள்ளது.
பலியானவர்களில் ஒரு கர்ப்பிணிப் பெண், அவரது பிறக்காத குழந்தை மற்றும் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நான்கு பேரும் அடங்குவர்.
போர்நிறுத்த உடன்பாட்டிற்கு பிறகும் தாக்குதல்கள் தொடர்ந்து தீவிரமடைந்து வருகின்றன.




