தேசிய நலன்களில் எந்தவொரு சூழலிலும் ஈரான் சமரசம் செய்துகொள்ளாது - ராணுவ தளபதி!

தேசிய நலன்களில் எந்தவொரு சூழலிலும் ஈரான் சமரசம் செய்துகொள்ளாது என்று ஈரான் ராணுவ தளபதி மேஜர் ஜெனரல் அமீர் ஹதாமி எச்சரித்துள்ளார்.
ஈரான் ராணுவத்திற்கும் இஸ்லாமிய புரட்சிகர பாதுகாப்பு படைக்கும் இடையே நிலவும் வலுவான ஒருங்கிணைப்பே நாட்டின் பாதுகாப்பின் முதன்மைத் தூண் என்றும் தெரிவித்துள்ளார்.
மேலும் ஈரானுக்கு எதிராக மேற்கொள்ளப்படும் எந்தவொரு ஆக்கிரமிப்புக்கும் ஒருங்கிணைந்த மற்றும் சக்திவாய்ந்த பதிலடி கொடுக்கப்படும் என்றும் அவர் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.




