இராணுவத் தாக்குதல்களை அரசியல் நியாயப்படுத்தலாகப் பயன்படுத்த வேண்டாம் - ஈரான் எச்சரிக்கை!

சர்வதேச அணுசக்தி முகமையின் IAEA தொழில்நுட்ப அறிக்கைகளை, ஈரானுக்கு எதிரான இராணுவத் தாக்குதல்களுக்கு அரசியல் நியாயப்படுத்தலாகப் பயன்படுத்த வேண்டாம் என ஈரான் கடுமையாக எச்சரித்துள்ளது.
அணுசக்தி முகமையின் தலைமை இயக்குநர் ராஃபேல் கிராசி அமைப்பின் நடுநிலைமையை சீர்குலைத்து, சட்டவிரோதப் போருக்கு வழிவகுக்கும் அரசியலில் ஈடுபடுவதாக ஈரான் வெளியுறவு அமைச்சகம் குற்றம் சாட்டியுள்ளது.




