தென்கொரிய - ஈரானிய வெளியுறவு அமைச்சர் இடையே தொலைபேசி உரையாடல்!

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் அதிகரித்து வரும் பதற்றத்திற்கு மத்தியில், தென்கொரிய வெளியுறவு அமைச்சர் சோ ஹியூன் மற்றும் ஈரானிய வெளியுறவு அமைச்சர் அப்வாஸ் அராக்சி இடையிலான தொலைபேசி பேச்சுவார்த்தை வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
ஹார்முஸ் ஜலசந்தியில் சர்வதேச வர்த்தகக் கப்பல்களின் பாதுகாப்பான போக்குவரத்து மற்றும் பிராந்திய அமைதியை ஏற்படுத்துவது குறித்து இரு தலைவர்களும் தீவிரமாக ஆலோசித்தனர்.




