செங்கடல் பகுதி முழுமையான கட்டுப்பாட்டில் - ஹூதி அமைப்பினர் அறிவிப்பு!

யேமனின் செங்கடல் கடலோரப் பகுதியில் 18 மணிநேரமாக இடம்பெற்ற தீவிரத் தாக்குதல்களின் முடிவில், அக்கடலோரப் பகுதி முழுவதையும் தங்கள் முழுமையான கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவந்துள்ளதாக ஹூதி அமைப்பினர் அறிவித்துள்ளனர்.
மோகா (Mocha) துறைமுக நகரம் உட்பட முக்கிய கடலோரப் பகுதிகளை ஹூதிகள் அதிரடியாகக் கைப்பற்றியுள்ளதைத் தொடர்ந்து, சர்வதேச ரீதியில் மிக முக்கிய வர்த்தகப் பாதையான பாப் அல்-மந்தேப் (Bab al-Mandeb) நீரிணைப்பகுதியில் ஹூதிகளின் கை ஓங்கியுள்ளது.
இத் திடீர் முன்னேற்றம் காரணமாகச் செங்கடல் வழியிலான சர்வதேசக் கப்பல் போக்குவரத்து மற்றும் எண்ணெய் விநியோகத்தில் மீண்டும் பெரும் அச்சுறுத்தலும் பதற்றமும் உருவாகியுள்ளது.




