சவுதியின் கச்சா எண்ணெய் உற்பத்தி நாளொன்றுக்கு 6.24 மில்லியன் பேரல்களாகக் வீழ்ச்சி!

அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே நிலவும் போர் பதற்றம் மற்றும் செங்கடல், ஹோர்முஸ் நீரிணைப் பகுதிகளில் தீவிரமடைந்துள்ள கடல்சார் முற்றுகைகள் காரணமாக, சவூதி அரேபியாவின் ஆகஸ்ட் மாத கச்சா எண்ணெய் உற்பத்தி நாளொன்றுக்கு 6.24 மில்லியன் பேரல்களாகக் குறைந்துள்ளது.
இது 1990ஆம் ஆண்டிற்குப் பிறகு மிகக் குறைந்த அளவாகும். இதனால் சர்வதேச சந்தையில் பிரெண்ட் கச்சா எண்ணெய் விலை பேரலுக்கு $100ஐத் தாண்டியுள்ளது




