SuperTopAds

வட கொரியா - ரஷ்யா இடையே இணைப்புப் பாலம் திறப்பு - உலக நாடுகள் அதிர்ச்சி!

ஆசிரியர் - Editor IV
வட கொரியா - ரஷ்யா இடையே இணைப்புப் பாலம் திறப்பு - உலக நாடுகள் அதிர்ச்சி!

வட கொரியா மற்றும் ரஷ்யாவை இணைத்து நிர்மாணிக்கப்பட்ட முதலாவது பாலம் திறந்து வைக்கப்பட்டுள்ளது.

டுமென் ஆற்றின் குறுக்கே அமைக்கப்பட்டுள்ள 1 கிலோமீட்டர் நீளமுடைய இந்தப் பாலத்தின் ஊடாக எல்லைகளுக்கு இடையே சரக்குகள் மற்றும் பயணிகளை இலகுவாகக் கொண்டு செல்ல முடியும் என வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

இந்தப் பாலத்தின் ஊடாக நாளாந்தம் 300 வாகனங்கள் வரை பயணிக்க முடியும் என்பதுடன், 2,323 பயணிகள் பாலத்தைக் கடந்து செல்ல முடியும் எனவும் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Radio