பற்றி எரியும் சவுதி எண்ணெய் ஆலைகள் - ஹூதி கிளர்ச்சியாளர்களே காரணம் - சவூதி குற்றச்சாட்டு!

சவூதி அரேபியாவின் தெற்குப் பகுதியில் உள்ள எரிசக்தி நிலையங்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல்களுக்கு ஏமனின் ஹூதி கிளர்ச்சியாளர்களே காரணம் என சவூதி அரேபியா குற்றம் சாட்டியுள்ளது.
இந்தத் தாக்குதல்களால் தீ விபத்துகள் ஏற்பட்டதோடு, சில எரிசக்தி செயல்பாடுகள் தற்காலிகமாக நிறுத்தப்படவும் காரணமாக அமைந்தன. இந்தத் தாக்குதல்களில் பல சவூதி குடிமக்களும் குடியிருப்பாளர்களும் காயமடைந்து, மருத்துவ சிகிச்சை பெற்று வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பொதுமக்கள் மற்றும் பொருளாதார மையங்கள் மீதான தாக்குதல்களையும், செங்கடலில் வர்த்தகக் கப்பல்கள் மீது ஹூதி கிளர்ச்சியாளர்கள் தொடர்ந்து நடத்தி வரும் தாக்குதல்களையும் ரியாத் கண்டித்துள்ளது.
தனது பிரதேசம் மற்றும் வளங்களுக்கு எதிரான ஆக்கிரமிப்புகளைத் "சகித்துக்கொள்ளாது" என சவூதி அரேபியா எச்சரித்துள்ளது.
அதே நேரத்தில், அவசரகாலக் குழுக்கள் தீயைக் கட்டுப்படுத்தவும், பாதிக்கப்பட்ட நிலையங்களைப் பாதுகாக்கவும், சேதங்களை மதிப்பிடவும் பணியாற்றி வருகின்றன.




