SuperTopAds

இந்து அமைப்பு குழல்ப்பம் - தற்காலிகமாக மூடப்பட்டது ஈபிள் கோபுரம்!

ஆசிரியர் - Editor IV
இந்து அமைப்பு குழல்ப்பம் - தற்காலிகமாக மூடப்பட்டது ஈபிள் கோபுரம்!

பாரிஸில் அமைந்துள்ள உலகப் புகழ்பெற்ற ஈபிள் கோபுரம் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஈபிள் கோபுரத்தைப் பார்வையிடச் சென்ற இந்து அமைப்பைச் சேர்ந்தவர்கள், அங்கு பணியாற்றும் பெண் ஊழியர்களை விலகி இருக்குமாறு கூறியதாகக் கூறப்படும் சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

குறித்த சம்பவத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து சக ஊழியர்கள் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டதைத் தொடர்ந்து, ஈபிள் கோபுரத்தின் செயற்பாடுகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இதனால், ஈபிள் கோபுரத்தைப் பார்வையிட வந்த பொதுமக்களுக்கும் சுற்றுலாப் பயணிகளுக்கும் அனுமதி வழங்கப்படவில்லை எனக் கூறப்படுகிறது.

எனினும், சம்பவம் தொடர்பான முழுமையான விபரங்களும், பெண் ஊழியர்களை விலகி இருக்குமாறு கூறப்பட்டதற்கான காரணமும் அதிகாரபூர்வமாக உறுதிப்படுத்தப்படவில்லை.

உலகின் முக்கிய சுற்றுலாத் தலங்களில் ஒன்றான ஈபிள் கோபுரம் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளமை சுற்றுலாப் பயணிகள் மத்தியில் கவனத்தை ஏற்படுத்தியுள்ளது.

Radio