காட்டு யானையுடன் மோதி விபத்துக்குள்ளான பஸ்: 21 பேர் காயம்!

செல்லக்கதிர்காமம் பகுதியில் கதிர்காமம் - புத்தல பிரதான வீதியில் பயணித்த பஸ் ஒன்று காட்டு யானையுடன் மோதியதில் விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்த விபத்தில் பேருந்தில் பயணித்த 21 பேர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.






