மெகசின் சிறைச்சாலைக்குள் போதைப்பொருள் வீச முயன்ற இருவர் கைது!

மெகசின் சிறைச்சாலையிலுள்ள கைதிகளுக்குப் போதைப்பொருட்கள் மற்றும் தடைசெய்யப்பட்ட பொருட்களைப் பிரத்தியேகப் பொதிகள் மூலம் கடத்த முயன்ற இருவரை பொலிஸார் அதிரடியாகக் கைது செய்துள்ளனர்.
கொழும்பு பேஸ்லைன் வீதியில் அமைந்துள்ள மெகசின் சிறைச்சாலையின் பக்கவாட்டுச் சுவருக்கு வெளிப்புறமாகச் சந்தேகத்திற்கிடமான முறையில் நடமாடிய இருவர் , சிறைச்சாலையின் பாதுகாப்புச் சுவருக்கு மேலாக இரண்டு பொதிகளை உட்புறமாக வீசுவதற்கு முயன்றபோதே, பொலிஸாரால் கைது செய்யப்பட்டன.
கைது செய்யப்பட்டவர்களிடமிருந்து கைப்பற்றப்பட்ட 02 பொதிகளையும் சோதனையிட்டபோது, அவற்றில் கைதிகளுக்கு வழங்குவதற்காக, 'ஐஸ்' போதைப்பொருள்: 22 கிராம் 250 மில்லிகிராம்,'ஹேஷ்' போதைப்பொருள்: 02 மில்லிகிராம், சிறிய ரக செல்பேசிகள்: 02, சார்ஜர்கள்: 02, லைட்டர்கள்: 10, காதணிகள்: 02 ஜோடிகள் மீட்கப்பட்டுள்ளன.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர்களிடம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.




