SuperTopAds

தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை இன்று

ஆசிரியர் - Editor II
தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை இன்று

தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை நடைபெறுகிறது

நாடளாவிய ரீதியில் உள்ள 2,723 பரீட்சை நிலையங்களில் இப்பரீட்சை நடைபெறவுள்ளது. 

புலமைப்பரிசில் பரீட்சைக்கு 294,089 மாணவர்கள் தோற்றியுள்ளனர். சிங்கள மொழியில் 220,366 மாணவர்களும், தமிழ் மொழியில் 73,723 மாணவர்களும் இதில் அடங்குவதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்தது. 

பிள்ளைகளின் மன ஏகாகிரதையைப் பேணி, கவனத்துடன் பரீட்சைக்கு முகங்கொடுப்பதற்கு இலகுவாக இருக்கும் வகையில், பரீட்சை ஆரம்பமாவதற்கு ஒரு மணித்தியாலத்திற்கு முன்னதாக பரீட்சை நிலையங்களைச் சென்றடையுமாறு பரீட்சைகள் திணைக்களம் அறிவுறுத்துகிறது. 

பரீட்சைக்குத் தோற்றும் அனைத்துப் பிள்ளைகளும் வினாத்தாளில் உள்ள அறிவுறுத்தல்களை நன்றாக வாசித்து, தங்களது பரீட்சை இலக்கத்தை சரியாகக் குறிப்பிட்டு, தெளிவான கையெழுத்தில் வினாத்தாளிலேயே விடையளிக்க வேண்டும் என்றும் பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் குறிப்பிட்டுள்ளார். 

Radio