SuperTopAds

மட்டக்களப்பு, அம்பாறைச் சந்தைகளில் 'ஏறு கெழுத்தி' மீனுக்கு அமோக வரவேற்பு

ஆசிரியர் - Editor III
மட்டக்களப்பு, அம்பாறைச் சந்தைகளில் 'ஏறு கெழுத்தி' மீனுக்கு அமோக வரவேற்பு

மட்டக்களப்பு, அம்பாறைச் சந்தைகளில் 'ஏறு கெழுத்தி' மீனுக்கு அமோக வரவேற்பு

கிலோ 500 ரூபாவிற்கு விற்பனையானாலும் ஆர்வத்துடன் வாங்கிச் செல்லும் பொதுமக்கள்

 ஆடி மாதம் பிறந்துள்ள நிலைக்கும், இப்பருவத்தில் மட்டுமே அதிகளவில் கிடைக்கப்பெறும் 'ஏறு கெழுத்தி' மீன்களுக்கு மட்டக்களப்பு மற்றும் அம்பாறை மாவட்டச் சந்தைகளில் பெரும் வரவேற்பு நிலவி வருகின்றது.

ஆண்டின் ஏனைய காலங்களில் தேடிப் பார்த்தாலும் அரிதாகவே கிடைக்கும் இம்மீன்கள், ஆடி மாதக் காலப்பகுதியில் மட்டுமே சந்தைகளுக்குப் பெருமளவில் விற்பனைக்கு வருகின்றன. இதனால் பொதுமக்கள் மிகுந்த ஆர்வத்துடன் இம்மீன்களை வாங்கிச் செல்கின்றனர்.

குறிப்பாக தேங்காய் அரைத்து, மாங்காய் சேர்த்துப் பாரம்பரிய முறையில் சமைக்கப்படும் 'ஏறு கெழுத்தி' மீன் கறி, மட்டக்களப்பு பிரதேசத்தின் தனித்துவமான சுவையான உணவாகக் கருதப்படுகின்றது.

தற்போது சந்தைகளில் ஏறு கெழுத்தி மீன் ஒரு கிலோகிராம் 500 ரூபா வரை விற்பனை செய்யப்பட்ட போதிலும், இதன் தனித்துவமான சுவையை விரும்பும் பொதுமக்கள் விலையைப் பொருட்படுத்தாமல் வாங்கிச் செல்கின்றனர்.

"ஒருமுறை ஏறு கெழுத்தியின் சுவையை அனுபவித்தவர்கள், விலை அதிகமாக இருந்தாலும் வாங்காமல் செல்லமாட்டார்கள்" என மீன் வியாபாரிகளும் நுகர்வோரும் மகிழ்ச்சியுடன் தெரிவிக்கின்றனர்.