யாழ். குப்பிளானில் வசமாக மாட்டிய பல்வேறு குற்றங்களுடன் தொடர்புடைய முக்கிய சந்தேகநபர்

ஆசிரியர் - Admin
யாழ். குப்பிளானில் வசமாக மாட்டிய பல்வேறு குற்றங்களுடன் தொடர்புடைய முக்கிய சந்தேகநபர்

பல்வேறு குற்றங்களுடன் தொடர்புடைய முக்கிய சந்தேகநபரொருவரை யாழ். குப்பிளான் பகுதியில் சுன்னாகம் பொலிஸாரும், விழிப்புக் குழுவினரும் இணைந்து சனிக்கிழமை(22) இரவு மடக்கிப் பிடித்துள்ளனர்.

மேற்படி சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது,

யாழ்.குப்பிளான் பகுதியில் அதிகரித்துள்ள திருட்டுக்களைத் தடுக்கும் நோக்குடன் பொதுமக்களினதும், சுன்னாகம் பொலிஸாரினதும் பங்குபற்றுதலுடன் விழிப்புக் குழுக்கள் அமைக்கப்பட்டு இரவுநேரக் காவல் கடமையில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் குப்பிளான் சந்திப் பகுதியில் நேற்று முன்தினம் சனிக்கிழமை இரவு சந்தேகத்துக்கிடமான முறையில் துவிச்சக்கர வண்டியில் பயணித்த நபர்களை விழிப்புக் குழுவினரும், சுன்னாகம் பொலிஸாரும் இணைந்து வழிமறித்துள்ளனர்.

ஏனைய இரு நபர்களும் அங்கிருந்து தப்பிச் சென்ற நிலையில் ஒரு நபரை மாத்திரம் விழிப்புக் குழுவினரும், சுன்னாகம் பொலிஸாரும் இணைந்து மடக்கிப் பிடித்தனர்.

இந்நிலையில் குறித்த நபரை சுன்னாகம் பொலிஸார் கைது செய்ய முற்பட்ட போது அவர்களுடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டதுடன் பொலிஸாரின் பிடியிலிருந்து தப்பிச் செல்வதற்கும் முயன்றுள்ளான்.

இந்நிலையில் கடும் பிரயத்தனங்களின் மத்தியில் குறித்த நபரைச் சுன்னாகம் பொலிஸார் கைது செய்து அழைத்துச் சென்றிருந்தனர். குறித்த நபர் கைது செய்யப்படும் போது சந்தேகநபரிடமிருந்து மூன்று கையடக்கத் தொலைபேசிகள் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன. குறித்த கையடக்கத் தொலைபேசிகள் திருடப்பட்டவை எனத் தெரிவிக்கப்படுகின்றது.

கைதான சந்தேகநபர் கோப்பாய்ப் பொலிஸ் பிரிவில் பல்வேறு குற்றங்களுடன் தொடர்புடைய நிலையில் பொலிஸாரால் தேடப்பட்டு வந்த முக்கிய சந்தேகநபர் என்பதுடன் வழக்கொன்றில் குற்றவாளியாக இனங்காணப்பட்டுச் சிறைத் தண்டனை அனுபவித்த நிலையில் அண்மையில் தான் விடுதலையானவராவார் எனவும் பொலிஸ் தரப்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்நிலையில் குறித்த சந்தேகநபர் சுன்னாகம் பொலிஸாரூடாக கோப்பாய்ப் பொலிஸாருக்குப் பாரப்படுத்தப்பட்டார். இந்த நிலையில் இன்று திங்கட்கிழமை(24) மல்லாகம் நீதவான் நீதிமன்றத்தில் சந்தேகநபர் ஆஜர்படுத்தப்பட்டார்.

இதனையடுத்து 14 தினங்களுக்கு விலக்கியமரியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவு பிறப்பித்தமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு