யாழ்ப்பாண பல்கலைக் கழகத்தின் 4 ஆவது சர்வதேச ஆய்வரங்கு எதிர்வரும் 27 ஆம் திகதி வியாழக்கிழமை ஆரம்பமாகவுள்ளது..
“பாதுகாப்பான எதிர்காலத்தை நோக்கி” என்ற தொனிப்பொருளோடு நடாத்தப்படும் இந்த சர்வதேச ஆய்வு மாநாடு எதிர்வரும் 27, 28 ஆம் திகதிகளில் யாழ். பல்கலைக்கழக மருத்துவ பீடத்தின் கூவர் அரங்கில் நடைபெறவுள்ளது.
"விவசாயமும் உணவு விஞ்ஞானமும்" , "பொறியியல் தொழிநுட்பம்", "மானுடவியல், சமூக விஞ்ஞானம் மற்றும் சட்டம்", "சுகாதாரமும் மருத்துவ விஞ்ஞானமும்", முகாமைத்துவக் கற்கைகள், வணிகம், தொழில் முயற்சியாண்மை,
விருந்தோம்பலும், சுற்றுலாத்துறையும்", "தூய மற்றும் பிரயோக விஞ்ஞானம்" ஆகிய 6 துறைகளில் 121 ஆய்வுக் கட்டுரைகள்ஐ சமர்ப்பிக்கப்படவிருக்கின்றன.
ஐக்கிய அமெரிக்கா, ஐக்கிய இராச்சியம், ஜப்பான், ஆஸ்திரேலியா உட்பட பல சர்வதேச நாடுகளைச் சேர்ந்த ஆய்வாளர்களும், இலங்கையின் பல்வேறு பல்கலைக்கழகங்களையும் சேர்ந்த கல்வியியலாளர்களும் பிரதான பேச்சாளர்களாகக் கலந்து கொள்ளவுள்ளனர்.
ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த பேராசிரியர் ஜெனி பேர்ணாட் மில்லர், பேராசிரியர் கேயர் ரீவஸ் ஆகியோரும், ஐக்கிய இராச்சியத்தைச் சேர்ந்த தமிழரான பேராசிரியர் நடராஜா ஶ்ரீகரன், ஜப்பானைச் சேர்ந்த ஆய்வாளர் ஸரீபன்
எம். லைத், ஐக்கிய அமெரிக்காவைச் சேர்ந்த பேராசிரியர் முருகேசு சிவபாலன் மற்றும் பேராதெனிய பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த பேராசிரியர் கலிங்க ரியூடோர் சில்வா ஆகியோர் பிரதம பேச்சாளர்களாகக் கலந்து கொண்டு அமர்வுகளின் ஆரம்ப உரைகளை நிகழ்த்தவிருக்கின்றனர்.