பொங்குதமிழ் நினைவுத் தூபி திறப்பு விழாவில் ஆவா குழுவாம்!

ஆசிரியர் - Admin
பொங்குதமிழ் நினைவுத் தூபி திறப்பு விழாவில் ஆவா குழுவாம்!

தமிழீழ விடுதலைப் புலிகளின் கொள்கைகளை, அப்பாவித் தமிழ் மக்களிடம் கொண்டு சேர்ப்பதே, “பொங்கு தமிழ் நிகழ்வு” எனத் தெரிவித்துள்ள கூட்டு எதிரணி, நாட்டைப் பிளவுபடுத்தி, இனக்கு​தங்களுக்கு வித்திடும், இதுபோன்ற பயங்கரவாதச் செயற்பாடுகளை, யாழ். பல்கலைகழகத்தில் நடத்துவதற்கு அரசாங்கம் எவ்வாறு அனுமதி வழங்கியது எனவும் கேள்வி எழுப்பியுள்ளது.

தமிழீழ விடுதலைப் புலிகளின் கொள்கைகளை, அப்பாவித் தமிழ் மக்களிடம் கொண்டு சேர்ப்பதே, “பொங்கு தமிழ் நிகழ்வு” எனத் தெரிவித்துள்ள கூட்டு எதிரணி, நாட்டைப் பிளவுபடுத்தி, இனக்கு​தங்களுக்கு வித்திடும், இதுபோன்ற பயங்கரவாதச் செயற்பாடுகளை, யாழ். பல்கலைகழகத்தில் நடத்துவதற்கு அரசாங்கம் எவ்வாறு அனுமதி வழங்கியது எனவும் கேள்வி எழுப்பியுள்ளது.

தமிழீழ விடுதலைப் புலிகளின் போராட்டம் தோற்கடிக்கப்பட்ட பின்னர், அவர்களது கொள்கையான “தனி தமிழீழம்” கோரிக்கையைப் பாதுகாக்கும் பிரிவினைவாதிகளின் நிகழ்வே, பொங்குதமிழ் பிரகடன நினைவுத் தூபி திறப்பு விழாவெனத் தெரிவித்த அந்த அணியின் நாடாளுமன்ற உறுப்பினர் பத்ம உதயசாந்த குணசேகர, இந்நிகழ்வில் பங்கேற்றிருந்த யாழ். பல்கலைக்கழகத் துணைவேந்தர் ரட்ணம் விக்னேஸ்வரனால், பொங்குதமிழ் நினைவுத் தூபி, திரை நீக்கம் செய்யப்பட்டது என்றும் தெரிவித்தார்.

பொரளையிலுள்ள என்.எம்.பெரேரா மத்திய நிலையத்தில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்துரைக்கும்போது, அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அங்கு அவர் தொடர்ந்து கருத்துரைக்கையில், பொங்குதமிழ் பிரகடன நினைவுத் தூபி திறப்பு விழாவில், ஆவா ஆயுதக் குழுவும் கலந்து கொண்டிருந்ததாக தமக்கு தகவல்கள் கி​டைத்ததாகவும், யாழ்ப்பாணத்தில் இராணுவம், விசேட அதிரடிப்படையினர் மற்றும் பொலிஸ் பாதுகாப்பு குறைக்கப்பட்டுள்ளதால், தமிழீழ விடுதலைப் புலிகளின் காலத்தை விடவும், தற்போது ஆயுதக் குழுக்களின் அராஜக செயற்பாடுகளால், தமிழ் மக்களின் இயல்பு வாழக்கை பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

இதனையே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும், எதிர்க்கட்சித் தலைவருமான இரா.சம்பந்தனும், வடமாகாண முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரனும் விரும்புவதாகவும் அவர் தெரிவித்தார்.

முல்லைத்தீவு மாவட்டத்தில் சிங்கள மக்கள் பூர்வீகமாக பரம்பரை பரம்பரையாக வாழ்ந்துவரும் ஜானகபுர மற்றும் கல்யாணபுர ஆகிய பிரதேசங்களிலுள்ள 450 சிங்களக் குடும்பங்களை அங்கிருந்து வெளியேறுமாறு, அம்மாவட்டச் செயலாளர் அறிவுறுத்தியுள்ளர் என்றும் உதயசாந்த எம்.பி இதன்போது தெரிவித்தார்..

வடக்கில் அபிவிருத்திகள் என்ற பெயரில், தமிழ் பிரிவினைவாதிகளின் கோரிக்கைகளை செயற்படுத்தும் வேலைத்திட்டங்களே மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், சிங்கள, தமிழ், முஸ்லிம் மக்களின் ஒற்றுமையை சீர்குலைக்கும் இவ்வாறான செயற்பாடுகளை உடனடியாக கைவிட வேண்டும் எனவும் ​அவர் கேட்டுக்கொண்டார்.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு