யாரை ஏமாற்றுகின்றார்கள் கரவெட்டிப் பிரதேச செயலக உத்தியோகத்தர்கள்?

ஆசிரியர் - Admin
யாரை ஏமாற்றுகின்றார்கள் கரவெட்டிப் பிரதேச செயலக உத்தியோகத்தர்கள்?

கரவெட்டிப் பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் தற்போது வல்லைப் பாலத்திற்கு அண்மையிலுள்ள வல்லை முனியப்பர் ஆலயத்திற்கருகிலுள்ள பகுதியில் தற்போது துப்பரவு செய்யும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

யாழ். மாவட்டக் கடல்சார் சூழல் பாதுகாப்பு அதிகார சபை கரையோரம் பேணல் மற்றும் கரையோர மூலவள முகாமைத்துவ நிலையம் ஆகியன இணைந்து இன்று(19) முதல் மூன்று தினங்களுக்கு சர்வதேச கடலோர தூய்மை தினத்தை நடைமுறைப்படுத்தியுள்ளது.

இதனையொட்டிக் கரவெட்டிப் பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் அனைவரும் மேற்படி பகுதியில் துப்பரவு செய்யும் பணியில் ஈடுபட்டுள்ள போதிலும் இதுதொடர்பில் பொதுமக்களுக்கு முன்னறிவித்தல் எவையும் விடுக்கப்படவில்லை எனத் தெரிவிக்கப்படுகின்றது.

இதனால், வரி செலுத்துனர்கள் உள்ளிட்ட பிரதேச செயலகத்தின் சேவைகளைப் பெற்றுக் கொள்ளும் பொதுமக்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர்.

வெறும் கண்துடைப்பா?

குறித்த பகுதியில் துப்பரவுப் பணியில் ஈடுபட்டுள்ள பெண் உத்தியோகத்தர்கள் சேலை அணிந்து துப்பரவுப் பணியில் ஈடுபட்டுள்ளதுடன் ஆண் உத்தியோகத்தர்களும் ரவுசர், சேட் அணிந்து துப்பரவுப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

துப்பரவுப் பணியில் ஈடுபட்டுள்ள உத்தியோகத்தர்கள் துப்பரவுப் பணியில் ஈடுபடும் போது அதற்கேற்றவாறு உடைகள் அணியாமல் வழமையாக வேலைக்குச் செல்லும் உடைகளுடன் துப்பரவுப் பணியில் ஈடுபட்டுள்ளமை தொடர்பில் பல்வேறு தரப்பினரும் கடும் விசனம் தெரிவித்துள்ளனர்.

இவ்வாறான துப்பரவுப் பணி வெறும் கண்துடைப்பு எனத் தெரிவித்துள்ள பொதுமக்கள் புகைப்படங்களுக்கு போஸ் கொடுப்பதற்காகவா இவ்வாறான துப்பரவுப் பணி முன்னெடுக்கப்படுகின்றது? எனவும் கேள்வி எழுப்பியுள்ளனர்.


பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு