கூட்டமைப்புடன் சேர்ந்து விடாதீர்கள்! - விக்னேஸ்வரனுக்கு சங்கரி கடிதம்

ஆசிரியர் - Admin
கூட்டமைப்புடன் சேர்ந்து விடாதீர்கள்! - விக்னேஸ்வரனுக்கு சங்கரி கடிதம்

தமிழரக் கட்சி உள்ளடக்கிய தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் இணைந்து அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபடவேண்டாம் என தமிழர் விடுதலைக் கூட்டணியின் செயலாளர் வீ. ஆனந்தசங்கரி, வடக்கு முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனுக்கு கடிதம் எழுதியுள்ளார்.

தமிழத் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் போட்டியிட்டு முதலமைச்சராக தெரிவு செய்யப்பட்ட நீங்கள் உட்கட்சி விவகாரத்தால் தாங்கள் சுயமாக சிந்தித்து செயற்பட முடியாமலேயே காலங்கள் ஓடிவிட்டன.

தமிழரசுக் கட்சியினர் தங்களுடன் மோதிக் கொண்டு அரசியல் நாகரீகம் கூட தெரியாமல் சிலர் தங்களை வசைபாடியது மட்டுமல்லாமல் முதலமைச்சர் பதவியில் இருந்து தங்களை அகற்ற அவர்கள் நடந்து கொண்ட முறைமையை எந்த ஒரு தமிழனாலும் ஏற்றுக் கொள்ள முடியாத ஒன்று.

தமிழர்கள் கையில் அதிகாரம் போனால் இப்படித்தான் செயற்படுவார்கள் என்று, எமது பண்பாடு, கலாசாரம் எல்லாம் வெறும் பேச்சளவில் மட்டும்தான் என எம்மைப் பார்த்து உலகமே நகைத்தது. இருந்தும் தாங்கள் பொறுமையை கடைப்பிடித்து மாகாண சபையின் காலம் முடியும்வரை தாக்குப்பிடித்து சமாளித்து விட்டீர்கள்.

உட்கட்சி உரசலால் நீங்கள் மனதில் நினைத்திருந்த பல நல்ல திட்டங்களை செயற்படுத்த முடியாமல் போய் விட்டது. அந்த இடைப்பட்ட காலத்தில் தங்களின் மனநிலை எவ்வாறு இருந்திருக்கும் என்பதை நான் நன்கு அறிவேன். ஏனெனில் என்னையும் தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைமைப் பொறுப்பில் இருந்து அகற்ற அவர்கள் எடுத்த நடவடிக்கை தோல்வியில் முடிய, என்னை கொலை செய்வதற்கு கூட பல முயற்சிகளையும் மேற்கொண்டனர், என்பது யாவரும் அறிந்ததே. தற்போதுள்ள தமிழரசுக் கட்சியின் சில முக்கிய பிரமுகர்கள் பதவி ஆசைக்காக கொலை செய்யவும் தயங்க மாட்டார்கள்.

தங்களின் பதவிக் காலத்தில் பல நல்ல திட்டங்களை நிறைவேற்றியிருக்கலாம். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் உள்ள ஒரு சிலரின் நடவடிக்கைகளால் எதுவுமே செய்யமுடியாத ஒரு இக்கட்டான நிலமைக்கு தாங்கள் தள்ளப்பட்டு விட்டீர்கள் என்பதை நான் நன்கு அறிவேன்.

எனவே அவ்வாறான ஒரு சூழ்நிலை தங்களுக்கு மீண்டும் வந்து விடக் கூடாது என்பதற்காகவே நான் இதனை பகிரங்கமான ஒரு அறிக்கையாக விடுக்கின்றேன். இனிமேல் எந்த ஒரு சந்தர்ப்பத்திலும் தமிழரக் கட்சி உள்ளடக்கிய தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் சார்ந்து அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபடவேண்டாம் என, அன்புடன் வேண்டுகோள் விடுக்கின்றேன்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு