வடக்கு அமைச்சரவை சிக்கலைத் தீர்க்க முயற்சி!

ஆசிரியர் - Admin
வடக்கு அமைச்சரவை சிக்கலைத் தீர்க்க முயற்சி!

வடக்கு மாகாண அமைச்­ச­ரவை தொடர்­பில் எழுந்­துள்ள சர்ச்­சையை எதிர்­வ­ரும் 18ஆம் திக­திக்கு முன்­னர் தீர்ப்­ப­தற்­கான முயற்­சி­கள் நேற்று முன்­னெ­டுக்­கப்­பட்­டுள்­ளன. இந்­தப் பிரச்­சி­னையை சுமு­க­மா­கத் தீர்ப்­ப­தற்கு அவைத் தலை­வர் முன்­வைத்­துள்ள யோச­னை­யில் எழுந்­துள்ள புதிய சிக்­கல் தொடர்­பில் முத­ல­மைச்­ச­ருக்கு நேற்று எடுத்­துக் கூறப்­பட்­டுள்­ளது.இது தொடர்­பில் தனது சட்­டத்­த­ர­ணி­க­ளு­டன் கலந்­து­ரை­யாடி இன்று பதி­ல­ளிப்­ப­தா­கத் தெரி­வித்­துள்­ளார்.

நீதி­மன்­றத்­தின் இடைக்­கா­லக் கட்­ட­ளை­யைச் செயற்­ப­டுத்­த­வில்லை எனத் தெரி­வித்து வடக்கு முத­ல­மைச்­சர் உள்­ளிட்ட மூன்று அமைச்­சர்­க­ளுக்கு எதி­ராக நீதி­மன்­றில் அவ­ம­திப்பு வழக்­குத் தாக்­கல் செய்­யப்­பட்­டுள்­ளது.இந்த வழக்கு மீதான விசா­ரணை எதிர்­வ­ரும் 18ஆம் திகதி நடை­பெ­ற­வுள்­ளது. அதற்கு முன்­ன­தாக, அமைச்­ச­ர­வைச் சிக்­க­லைத் தீர்த்து, வழக்கை மீளப் பெறச் செய்­யும் முயற்சி முன்­னெ­டுக்­கப்­பட்­டுள்­ளது.

அவைத் தலை­வர் சி.வி.கே.சிவ­ஞா­னம், வடக்கு மாகாண முத­ல­மைச்­ச­ரை­யும், ஆளு­ந­ரை­யும் நேற்று முன்­தி­னம் சந்­தித்­துக் கலந்­து­ரை­யா­டி­யி­ருந்­தார்.

வடக்கு அமைச்­ச­ர­வை­யி­லுள்­ள­வர்­கள் அனை­வ­ரும் பதவி வில­கு­வ­தா­கத் தெரி­வித்து ஆளு­ந­ருக்கு முத­ல­மைச்­சர் கடி­தம் அனுப்­பு­வது என்­றும் பின்­னர் புதிய அமைச்­ச­ர­வையை முத­ல­மைச்­சர் அறி­விப்­ப­தன் ஊடாக அமைச்­ச­ரவை பிரச்­சி­னைக்கு தீர்வு காண முடி­யும் என்று அவைத் தலை­வர் யோசனை முன்­வைத்­தி­ருந்­தார்.

ஆனால், வழக்­குத் தாக்­கல் செய்த பா.டெனீஸ்­வ­ரன், நீதி­மன்­றம் வழங்­கிய இடைக்­கா­லக் கட்­ட­ளை­யின் அடிப்­ப­டை­யில் பத­வி­யேற்ற பின்­னரே அவரை நீக்க முடி­யும். அதற்கு மாறாக சகல அமைச்­சர்­க­ளும் பதவி வில­கு­வ­தா­கக் கொடுக்­கும் கடி­தத்­தின் ஊடாக செயற்­ப­டுத்த முடி­யாது. அவைத் தலை­வர் முன்­வைத்த யோச­னை­யில் புதி­தாக எழுந்த சிக்­கல் இது­வா­கும்.

இந்த விட­யம் வடக்கு மாகாண முத­ல­மைச்­சர் சி.வி.விக்­னேஸ்­வ­ர­னுக்கு நேற்று எடுத்­துக் கூறப்­பட்­டது. இது தொடர்­பில் தனது சட்­டத்­த­ர­ணி­க­ளு­டன் ஆராய்ந்து முடிவை பெரும்­பா­லும் நாளை (இன்று) கூறு­வ­தாக முத­ல­மைச்­சர் தெரி­வித்­துள்­ளார்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு