SuperTopAds

முல்லைத்தீவில் படையினர் வசம் உள்ள காணிகள் பொதுமக்களுக்கு -

ஆசிரியர் - Editor II
முல்லைத்தீவில் படையினர் வசம் உள்ள காணிகள் பொதுமக்களுக்கு -

முல்லைத்தீவு மாவட்டத்தில் பாதுகாப்பு படையினருக்கு தேவையான அளவு காணிகளை பெற்றுக்கொண்ட பின்னர், படையினர் பயன்படுத்தி வரும் பொதுமக்களின் காணிகளை அவர்களிடம் மீள கையளிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என முல்லைத்தீவு மாவட்ட அரசாங்க அதிபர் ரூபவதி கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார்.

இதற்கு, தேவையான காணிகளை அளவிடும் பணிகள் தற்போது மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அவர் கூறியுள்ளார்.

முல்லைத்தீவு மாவட்டத்தின் கேப்பாப்புலவு பிரதேசத்தில் 158 ஏக்கர் நிலத்தில் கண்ணி வெடிகள் அகற்றப்பட்டு, தம்மிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ள அவர், அந்த காணிகளை எதிர்வரும் 28ஆம் திகதி பொது மக்களிடம் கையளிக்க உள்ளதாகவும் கூறியுள்ளார்.

அத்துடன், முல்லைத்தீவு மாவட்டத்தில் மீள்குடியேற்றத்திற்காக 168 குடும்பங்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளன.

இவர்களுக்கு இந்தியாவின் வீட்டுத் திட்ட யோசனையின் கீழ் 12 இலட்சம் ரூபா செலவில் நிர்மாணிக்கப்பட்டுள்ள நிரந்தர வீடுகளை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அரசாங்க அதிபர் மேலும் குறிப்பிட்டுள்ளார்