இராணுவ ட்ரோன் கொள்வனவு - அமெரிக்காவுக்கு சவால் விடுக்கும் கியூபா!

புளோரிடா, குவாண்டநாமோ அல்லது அமெரிக்க கடற்படைக் கப்பல்களைத் தாக்கக்கூடிய திறன் கொண்ட 300-க்கும் மேற்பட்ட அதிநவீன ராணுவ ட்ரோன்களை கியூபா வாங்கியுள்ளதாக 'ஆக்ஸியோஸ்' (Axios) செய்தி வெளியிட்டுள்ளது.
இதுவே அமெரிக்காவின் இந்த அவசர நடவடிக்கைக்கு முக்கிய காரணம் எனப் பார்க்கப்படுகிறது.
இதையடுத்து அடுத்தடுத்த நாட்களிலும் வாரங்களிலும் கூடுதல் தடைகள் வரும்" என அமெரிக்க செனட்டர் மார்கோ ரூபியோ எச்சரித்துள்ளார்.
சிஐஏ (CIA) இயக்குனர் ஜான் ராட்க்ளிஃப் கியூபாவின் ஹவானா நகருக்கு நேரில் சென்று பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார்.
இந்த மாத தொடக்கத்தில் கியூபாவை "உடனடியாகக் கைப்பற்றுவது" குறித்து டிரம்ப் பகிரங்கமாகப் பேசியிருந்ததும், ரவுல் காஸ்ட்ரோவுக்கு எதிராக அமெரிக்க நீதித்துறை குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய முயல்வதும் நிலைமையை மேலும் தீவிரமாக்கியுள்ளது.
டிரம்பின் அடுத்த அதிரடி நடவடிக்கை என்னவாக இருக்கும் என்ற அச்சத்தில் கியூபா எல்லையில் பதற்றம் அதிகரித்துள்ளது.
அமெரிக்காவின் இந்த அதிரடி நடவடிக்கை கியூபாவில் ஆட்சிக் கவிழ்ப்புக்கு வழிவகுக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளமை குறிப்பிடத்தக்கது




