SuperTopAds

கண்ணியத்துடன் நடத்தப்படும் பேச்சு அவசியம் - ஈரான் !

ஆசிரியர் - Editor IV
கண்ணியத்துடன் நடத்தப்படும் பேச்சு அவசியம் - ஈரான் !

அமெரிக்காவுடன் பேச்சுக்களைத் தொடர வேண்டும் என்ற கருத்தை ஈரான் ஜனாதிபதி மசூத் பெசெஷ்கியான் வெளிப்படுத்தியுள்ளார்.

கண்ணியத்துடன் நடத்தப்படும் பேச்சு அவசியம் என்றும் ஈரான் தனது தேசிய உரிமைகளைத் தொடர்ந்து பாதுகாக்கும்.

பேச்சு நடத்த மறுப்பது அறிவுப்பூர்வமானதல்ல. நாங்கள் பேச்சில் ஈடுபடக்கூடாது என்று அவர்கள் கோஷமிடுகிறார்கள்.

நாட்டில் உள்ள ஒற்றுமையையும், ஒருமைப்பாட்டையும் நாம் உடைக்காமல் இருக்க முயற்சிக்க வேண்டும்.

ஈரானின் எதிரிகள் நாட்டை சீர்குலைக்க முயற்சிக்கின்றனர். அவர்கள் 3 நாள்களில் ஈரானில் குடியரசு அமைப்பைக் கவிழ்க்க விரும்பினர், ஆனால் இன்று அவர்கள் பிளவுகளை விதைத்து முன்னேற சதித்திட்டம் தீட்டியுள்ளனர் என்று கூறினார்.

Radio