SuperTopAds

மூன்றாவது இஸ்ரேலிய அதிகாரிக்கும் ஐசிசி வாரண்ட் - கொதித்தெழுந்த இஸ்ரேல்!

ஆசிரியர் - Editor IV
மூன்றாவது இஸ்ரேலிய அதிகாரிக்கும் ஐசிசி வாரண்ட் - கொதித்தெழுந்த இஸ்ரேல்!

இஸ்ரேல் அரசியலில் பெரும் புயலைக் கிளப்பும் வகையில், தமக்கு எதிராகச் சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் (ICC) வழக்கறிஞர்கள் இரகசியக் கைது வாரண்ட் கோரியுள்ளதாக இஸ்ரேலிய நிதியமைச்சர் பெசலெல் ஸ்மோட்ரிச் இன்று (மே 19) நடத்திய அவசர செய்தியாளர் சந்திப்பில் அதிரடியாகப் பகிர்ந்துள்ளார்.

கடந்த 2024 நவம்பரில் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு மற்றும் முன்னாள் பாதுகாப்பு அமைச்சர் யோவ் கேலண்ட் ஆகியோருக்கு வாரண்ட் பிறப்பிக்கப்பட்ட நிலையில், இந்த பட்டியலில் இணையும் மூன்றாவது முக்கிய இஸ்ரேலிய அதிகாரி ஸ்மோட்ரிச் ஆவார்.

காசா போர்க்குற்றங்கள், மனிதநேயத்திற்கு எதிரான குற்றங்கள் மற்றும் ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக் கரையில் சட்டவிரோதக் குடியேற்றங்களை அசுர வேகத்தில் விரிவுபடுத்தியது ஆகிய குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் இந்த வாரண்ட் கோரப்பட்டுள்ளது.

இதனை "இஸ்ரேல் அரசுக்கு எதிரான போர்ப் பிரகடனம்" எனச் சாடியுள்ள ஸ்மோட்ரிச், இதற்குப் பதிலடியாகப் பாலஸ்தீன பெடோயின் மக்களின் வரலாற்றுச் சிறப்புமிக்க 'கான் அல்-அஹ்மர்' (Khan al-Ahmar) கிராமத்தை உடனடியாகத் தரைமட்டமாக்க ராணுவத்திற்கு உத்தரவிட்டுள்ளார்.

Radio