SuperTopAds

டெல் அவிவ் நகரில் முகாமிடும் அமெரிக்கா - ராணுவத் தளமாக மாறும் பென் குரியன் விமான நிலையம்!

ஆசிரியர் - Editor IV
டெல் அவிவ் நகரில் முகாமிடும் அமெரிக்கா - ராணுவத் தளமாக மாறும் பென் குரியன் விமான நிலையம்!

பிராந்தியத்தில் நிலவும் தீவிர பாதுகாப்புச் சூழல் காரணமாக, டெல் அவிவ் நகரில் உள்ள பென் குரியன் சர்வதேச விமான நிலையத்தில் நிறுத்தப்பட்டுள்ள அமெரிக்காவின் அசுரத்தனமான வான்வழி எரிபொருள் நிரப்பும் விமானங்கள், வரும் டிசம்பர் மாதம் வரை அங்கேயே தங்கியிருக்கும் என்று அமெரிக்காவிடமிருந்து இஸ்ரேலுக்குச் செய்திகள் வந்துள்ளதாக இஸ்ரேலிய சேனல் 12 ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.

அமெரிக்காவின் இந்த நீண்டகால மூலோபாய நகர்வு, இஸ்ரேலிய சிவில் விமானப் போக்குவரத்து அதிகாரிகளிடையே பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது.

ஏற்கனவே விமான நிலையத்தில் கடுமையான இடநெருக்கடி ஏற்பட்டு, 'எல் ஆல்' (El Al) போன்ற உள்நாட்டு பயணிகள் விமானங்கள் ஓடுபாதைக்கு அருகில் நிறுத்தப்பட்டுள்ள சூழலில், அமெரிக்காவின் இந்த முடிவு விமான நிலையத்தை முழுமையாக ஒரு ராணுவத் தளமாக மாற்றும் என எச்சரிக்கப்படுகிறது. 

Radio