வான் சாகசத்தில் ஈடுபட்ட இரு போர் விமானங்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்து - அமெரிக்காவில் அதிர்ச்சி!

அமெரிக்காவில் நடைபெற்ற வான் சாகசக் கண்காட்சியின்போது, அந்நாட்டு கடற்படைக்குச் சொந்தமான இரண்டு போர் ஜெட் விமானங்கள் வான்பரப்பில் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்துக்குள்ளாகின.
விமானங்கள் மோதிய உடனே, அதிலிருந்த விமானிகள் இருவரும் பரசூட் உதவியுடன் வானில் இருந்து பாதுகாப்பாகக் கீழே குதித்து உயிர் தப்பினர்.
இந்த விபத்து குறித்து அமெரிக்க பாதுகாப்புப் பிரிவினர் தற்போது தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.




