தாக்கினால் பதிலடி கடுமையானதாக இருக்கும் - ஈரான் எச்சரிக்கை!

அமெரிக்காவும் இஸ்ரேலும் மீண்டும் தம்மீது தாக்குதல் நடத்தினால், அதற்கு உரிய பதிலடி கொடுக்கப்படும் என்று ஈரான் அதிரடியாக எச்சரித்துள்ளது.
ஈரானிய உச்சத் தலைவரின் இராணுவ ஆலோசகர், அந்நாட்டு ஆயுதப் படையினர் எந்தவொரு தாக்குதலையும் எதிர்கொள்ளத் தயாராக இருப்பதாகத் தெரிவித்துள்ளார்.
ஒருபுறம் போர் பதற்றம் நிலவினாலும், மறுபுறம் அரசதந்திர ரீதியிலான பேச்சுவார்த்தைகளும் தொடர்ந்து வருகின்றன.
பாகிஸ்தான் உள்துறை அமைச்சர், ஈரான் அதிபர் மற்றும் நாடாளுமன்ற நாயகரைச் சந்தித்து சமரச முயற்சிகளில் ஈடுபட்டுள்ளார்.
டிரம்ப் நிர்வாகம் ஐந்து நிபந்தனைகளை முன்வைத்துள்ளதாக ஈரானிய ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.
400 கிலோகிராம் செறிவூட்டப்பட்ட யுரேனியத்தை அமெரிக்காவிடம் ஒப்படைக்க வேண்டும் என்பது முக்கிய நிபந்தனைகளில் ஒன்றாகக் கூறப்படுகிறது.
இரு நாடுகளுக்கும் இடையே பேச்சுவார்த்தை நடந்தால் மட்டுமே போர்நிறுத்தம் சாத்தியமாகும் என்றும் குறிப்பிடப்படுகிறது.
சர்வதேச அளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள இந்த விவகாரத்தில், அடுத்தகட்ட நகர்வுகள் என்னவாக இருக்கும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.




