உலக அரங்கில் சரிந்துவரும் இஸ்ரேலின் செல்வாக்கு!

சர்வதேச அளவில் புகழ்பெற்ற 'Pew Research Center' அண்மையில் வெளியிட்டுள்ள நம்பகமான கருத்துக்கணிப்புத் தரவுகள், இஸ்ரேல் மீதான உலகளாவிய பொதுமக்களின் ஆதரவு மற்றும் நற்பெயர் மிகக் கடுமையான சரிவைச் சந்தித்துள்ளதை உறுதிபடுத்தியுள்ளன.
இஸ்ரேலின் மிக நெருங்கிய கூட்டாளியாகக் கருதப்படும் அமெரிக்காவிலேயே, சுமார் 60% பெரியவர்கள் இஸ்ரேல் மீது எதிர்மறையான பார்வையைத் தற்போது கொண்டுள்ளனர்.
இதே நேரம்
ஆஸ்திரேலியா, இந்தோனேசியா, ஸ்பெயின், ஜப்பான், ஸ்வீடன் போன்ற முன்னணி உலக நாடுகளில் இஸ்ரேல் மீதான அதிருப்தி நிலை மிக உச்சகட்டமாக 70% முதல் 80% வரை பதிவாகியுள்ளது.
உலகளவில் 18 முதல் 49 வயதுக்கு இடைப்பட்ட இளம் தலைமுறையினர் மற்றும் நடுத்தர வயதினர் மத்தியில்தான் இஸ்ரேல் மற்றும் அதன் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு மீதான அதிருப்தி மிக வேகமாக அதிகரித்து வருவது இத்தரவுகள் மூலம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
மாறிவரும் உலக அரசியல் மற்றும் மக்கள் மனநிலையை இந்தத் தரவுகள் மிகத் தெளிவாகப் படம் பிடித்துக் காட்டுகின்றன.




