ஈரான் வந்தடைந்த பாகிஸ்தான் உள்துறை அமைச்சர் - அதிபருடன் நீண்ட நேரப் பேச்சு!

பெசெஷ்கியானுடன் பாகிஸ்தான் உள்துறை அமைச்சரின் தொண்ணூறு நிமிட சந்திப்பு இடம்பெற்றதாக
தெஹ்ரானில் உள்ள இஸ்லாமாபாத் தூதரகம் விடுத்த அறிக்கையில் குறிபிடப்பட்டுள்ளது
நேற்று தெஹ்ரான் வந்தடைந்த பாகிஸ்தான் உள்துறை அமைச்சர் மோசின் நக்வி, அதிபர் அலுவலகத்தில் கிட்டத்தட்ட மூன்று மணி நேரம் செலவிட்டார்.
அதிபர் அலுவலகத்தில் நடைபெற்ற இந்தச் சந்திப்பின் போது, ஈரானிய உள்துறை அமைச்சருடன் வெளியுறவு அமைச்சரும் உடனிருந்தார்.
பாகிஸ்தான் உள்துறை அமைச்சர், ஈரானிய அதிபருடன் சுமார் 90 நிமிடங்கள் நீடித்த ஒரு தனிப்பட்ட சந்திப்பையும் நடத்தினார், இதில் ஈரானிய உள்துறை அமைச்சரும் கலந்து கொண்டார்.




