எந்தவொரு தரப்பிடமிருந்தும் பாதுகாப்பு கோரவில்லை - ஐக்கிய அரபு அமீரகம்!

எந்தவொரு தரப்பிடமிருந்தும் பாதுகாப்பு கோரவில்லை என்றும், ஆக்கிரமிப்பைத் தடுக்கும் முழுத் திறன் தமக்கு உண்டு என்றும் ஐக்கிய அரபு அமீரகம் கூறியுள்ளது.
அத்துடன் தனது இறையாண்மை மற்றும் பிராந்திய ஒருமைப்பாட்டைப் பாதுகாக்கும் உரிமையையும் மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளது எனவும் அனடோலு செய்தி வெளியிட்டுள்ளது,
ஈரானுடனான மோதலில் ஐக்கிய அரபு அமீரகம் ஒரு பெரிய பங்கை ஏற்க வேண்டும் என்றும், ஈரானின் மூலோபாய முக்கியத்துவம் வாய்ந்த லவான் தீவைக் கைப்பற்றுவது உட்பட பல நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என்றும் அதிபர் டிரம்பின் ஆலோசகர்கள் ஊக்குவிப்பதாக டெலிகிராப் செய்தி வெளியிட்டுள்ளது.




