அமெரிக்காவை ஆதரிக்கும் நாடுகளும் விளைவுகளை சந்திக்க வேண்டும் - ஐ.நா தீர்மானத்தை ஆதரித்த நாடுகளுக்கு ஈரான் எச்சரிக்கை!

அமெரிக்கா தனது அரசியல் நோக்கத்திற்காக உருவாக்கிய ஒருதலைப்பட்ச ஐ.நா வரைவு தீர்மானத்திற்கு பல நாடுகளை இணைத்துக் கொண்டு, உலக ஆதரவு இருப்பதாக போலியான படத்தை உருவாக்க முயற்சிக்கிறது என்று ஈரான் குற்றம் சாட்டியுள்ளது.
அத்துடன் அமெரிக்கா புதிய மோதலை தொடங்கினால், அதனை ஆதரித்த அனைத்து நாடுகளும் அதன் விளைவுகளுக்குப் பொறுப்பேற்க வேண்டும் என ஈரான் எச்சரித்துள்ளது.
அமெரிக்க ஆக்கிரமிப்பை ஆதரித்து, நியாயப்படுத்த உதவிய எந்த நாடும் பொறுப்பிலிருந்து தப்ப முடியாது என்றும் ஈரான் தெரிவித்துள்ளது.
மத்திய கிழக்கில் பதற்றம் உச்சத்தை எட்டும் நிலையில்,
இந்த எச்சரிக்கை உலக அரசியலில் புதிய அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது




