45 நாள் போர் நிறுத்தம் அறிவித்த சில மணி நேரங்களில் இஸ்ரேலின் அதிரடித் தாக்குதல்!

உலகமே அதிர்ச்சியில் உறையும் அளவுக்கு இஸ்ரேல் தனது புதிய தாக்குதல்களை லெபனான் மீது தொடங்கியுள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
நேற்றுதான் இஸ்ரேல் - லெபனான் இடையே மேலும் 45 நாட்களுக்குப் போர் நிறுத்த ஒப்பந்தம்
நீட்டிக்கப்பட்டதாக அமெரிக்கா பெருமையாக அறிவித்தது.
ஆனால், அறிவிப்பு வந்த சில மணி நேரங்களிலேயே, லெபனானில் உள்ள ஹெஸ்பொல்லா (Hezbollah) தளங்களைக் குறிவைத்து இஸ்ரேல் ராணுவம் குண்டுகளை வீசத் தொடங்கியுள்ளது.
இதேநேரம் தாக்குதல் தொடங்குவதற்குச் சற்று முன்பு, தெற்கு லெபனானில் உள்ள 9 நகரங்கள் மற்றும் கிராமங்களில் வாழும் மக்கள் உடனே அந்த இடத்தை விட்டு வெளியேற வேண்டும் என்று இஸ்ரேல் ராணுவம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.
இதேநேரம் வாஷிங்டனில் இரண்டு நாட்களாக நடந்த அமைதிப் பேச்சுவார்த்தைகள் "மிகவும் பயனுள்ளதாக அமைந்தது" என அமெரிக்கா சொல்கிறது.
ஆனால், கள நிலவரமோ வேறு மாதிரி இருக்கிறது. போர் நிறுத்தம் (Ceasefire) என்ற பெயரில் இஸ்ரேல் தனது அடுத்த தாக்குதலுக்குத் தயாராகிறதா என்ற சந்தேகம் உலக நாடுகளிடையே எழுந்துள்ளது.
ஈரான் ஒருபுறம் போருக்குத் தயாராகி வரும் நிலையில், இஸ்ரேலின் இந்த இடைவிடாத தாக்குதல்கள் ஒட்டுமொத்த மத்திய கிழக்கையும் ஒரு மாபெரும் உலகப் போருக்குள் தள்ளிவிடுமோ என்ற அச்சம் எழுந்துள்ளமை குறிப்பிடத்தக்கது




