SuperTopAds

ஈரான் மீது புதிய பொருளாதாரத் தடைகளை பிரயோகிக்கச் சீன அதிபர் மறுப்பு!

ஆசிரியர் - Editor IV
ஈரான் மீது புதிய பொருளாதாரத் தடைகளை பிரயோகிக்கச் சீன அதிபர் மறுப்பு!

சர்வதேச அரங்கில் வல்லரசு நாடுகளுக்கு இடையிலான ராஜதந்திரப் போர் உச்சகட்டத்தை எட்டியுள்ளது.

குறிப்பாக ஈரானுக்கு எதிரான அமெரிக்காவின் அழுத்தங்கள் முழுமையாகத் தோல்வியடைந்துள்ள சூழலில், அது உலகளாவிய அதிகாரச் சமநிலையை மாற்றியமைத்துள்ளதாகப்புவிசார் அரசியல் ஆய்வாளர்கள் குறிப்பிடுகின்றனர்.

இதேநேரம் ட்ரம்பின் சமீபத்திய பெய்ஜிங் சந்திப்பில், ஈரான் மீது புதிய பொருளாதாரத் தடைகளையோ அல்லது அழுத்தங்களையோ பிரயோகிக்கச் சீன அதிபர் ஷி ஜின்பிங் மறுத்துவிட்டதாக கூறப்படுகின்றது.

இன்நிலையில் அதிபர் டொனால்ட் டிரம்ப் எவ்வித ஒப்பந்தமும் இன்றி வாஷிங்டன் திரும்பியுள்ளார்.

இது தெஹ்ரானின் மூலோபாய பலத்தை உலகிற்கு உணர்த்தியுள்ளதாகவு ஆய்வாளர்கள் கூறுகின்றனர்

Radio