ஈராக்குடன் கைகோர்க்கும் ஈரான் - மத்திய கிழக்கில் புதிய அத்தியாயம் ஆரம்பம்!

ஈராக்கின் புதிய பிரதமராகப் பொறுப்பேற்றுள்ள அலி அலி-ஜைதிக்குத் தனது வாழ்த்துகளைத் தெரிவித்த ஈரான் அதிபர் மசூத் பெஷெஷ்கியன், ஈராக்கை ஈரானின் 'மூலோபாய ஆழம்' (Strategic Depth) என்று வருணித்துள்ளார்.
பிராந்தியப் பாதுகாப்பு மற்றும் பொருளாதார மேம்பாட்டிற்கு ஈராக் புதிய அரசுடன் இணைந்து செயல்பட ஈரான் தயாராக இருப்பதாகவும், ஈராக்கிற்குத் தேவையான அனைத்து உதவிகளும் தொடர்ந்து வழங்கப்படும் என்றும் அவர் உறுதியளித்துள்ளார்.




