SuperTopAds

யுரேனியம் இருப்பு விவகாரம் - பேச்சுவார்த்தை இழுபறி - ஈரான் அமைச்சர்!

ஆசிரியர் - Editor IV
யுரேனியம் இருப்பு விவகாரம் - பேச்சுவார்த்தை இழுபறி - ஈரான் அமைச்சர்!

அமெரிக்காவுடனான பேச்சுவார்த்தைகள் இழுபறி நிலையை  எட்டியுள்ளதாக ஈரானிய வெளிவிவகார அமைச்சர் அப்பாஸ் அராக்சி தெரிவித்துள்ளார்.

ஈரானின் செறிவூட்டப்பட்ட யுரேனியம் இருப்பைக் கையாள்வது தொடர்பான விவகாரத்திலேயே இந்தப் பேச்சுவார்த்தைகள் முடங்கியுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

அமெரிக்காவின் உண்மையான நோக்கங்கள் குறித்து ஈரான் கொண்டுள்ள அநம்பிக்கையே இந்த பேச்சுவார்த்தைகளில் எழுந்துள்ள முக்கிய பிரச்சினை என்றும் ஈரான் வெளிவிவகார அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

Radio