SuperTopAds

மிதக்கும் ஆயுதக் கிடங்கை கைப்பற்றியதா ஈரான் - சர்வதேச கடற்பரப்பில் பெரும் அதிர்வலை!

ஆசிரியர் - Editor IV
மிதக்கும் ஆயுதக் கிடங்கை கைப்பற்றியதா ஈரான் - சர்வதேச கடற்பரப்பில் பெரும் அதிர்வலை!

ஓமன் வளைகுடாவில் "மிதக்கும் ஆயுதக் கிடங்காக" செயற்பட்டு வந்த கப்பல் ஒன்றை ஈரானிய இராணுவத்தினர் கைப்பற்றியுள்ளதாக கடல்சார் இடர் மேலாண்மை நிறுவனமான வான்கார்ட் தெரிவித்துள்ளது.

ஹொண்டுராஸ் நாட்டின் கொடியுடன் பயணித்த 'ஹுய் சுவான்' (uui Chuan) எனும் இந்தக் கப்பல், தற்போது ஈரானிய கடல் எல்லை நோக்கி கொண்டு செல்லப்படுவதாக பிரித்தானிய கடல்சார் வர்த்தகச் செயற்பாட்டு அமைப்பு உறுதிப்படுத்தியுள்ளது.

கடல் கொள்ளையர்களிடமிருந்து சரக்குக் கப்பல்களைப் பாதுகாக்கும் பாதுகாப்பு நிறுவனங்களுக்கான ஆயுதங்கள் மற்றும் வெடிபொருட்களைச் சேமித்து வைக்கும் இடமாக இந்தக் கப்பல் பயன்படுத்தப்பட்டு வந்தது.

இந்தக்கப்பல் கடைசியாக ஐக்கிய அரபு அமீரகத்தின் ஃபுஜைராவிற்கு வடகிழக்கே 70 கி.மீ தொலைவில் இருந்தபோது அதன் இருப்பிடத் தரவுகள் பதிவாகியுள்ளன.

இதேவேளை, ஓமன் கடற்பரப்பில் பயணித்த இந்தியக் கொடியுடன் கூடிய 'ஹாஜி அலி' என்ற கப்பல் மீதும் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

ஆளில்லா வானூர்தி மூலம் அல்லது ஏவுகணை மூலம் நடத்தப்பட்டதாகக் கருதப்படும் வெடிப்பைத் தொடர்ந்து இந்தக் கப்பல் கடலில் மூழ்கியுள்ளது.

எனினும், கப்பலில் இருந்த 14 இந்திய மாலுமிகளும் ஓமன் காவல்துறையினரால் பாதுகாப்பாக மீட்கப்பட்டு திபா துறைமுகத்திற்கு அழைத்து வரப்பட்டுள்ளனர்.

சோமாலியாவிலிருந்து கால்நடைகளை ஏற்றிச் சென்ற இந்தக் கப்பல் மீதான தாக்குதல் "ஏற்றுக்கொள்ள முடியாதது" என இந்திய வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது

Radio