SuperTopAds

35,000 கி.மீ தூர இலக்கு - அதீத பலம் வாய்ந்த ஏவுகணையை இராணுவத்தில் இணைக்கும் ரஷ்யா!

ஆசிரியர் - Editor IV
35,000 கி.மீ தூர இலக்கு - அதீத பலம் வாய்ந்த ஏவுகணையை இராணுவத்தில் இணைக்கும் ரஷ்யா!

ரஷ்யாவின் அதீத பலம் வாய்ந்த 'சிமாட்' (Sarmat) கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை (ICBM) வெற்றிகரமாகச் சோதனை செய்யப்பட்டதாக அதிபர் விளாடிமிர் புடின் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.

"உலகின் மிக சக்திவாய்ந்த ஏவுகணை" என வர்ணிக்கப்படும் இது, இந்த ஆண்டு இறுதிக்குள் ரஷ்ய இராணுவத்தில் முழுமையாக இணைக்கப்பட்டு பயன்பாட்டுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

35,000 கிலோமீட்டருக்கும் அதிகமான தூரம் பயணிக்கும் திறன் கொண்ட இந்த ஏவுகணை, ஒரே நேரத்தில் பல அணு ஆயுதங்களைச் சுமந்து சென்று உலகின் எந்தப் பகுதியையும் தாக்கும் வல்லமை கொண்டது.

குறிப்பாக, அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளின் தற்போதைய மற்றும் எதிர்கால ஏவுகணை எதிர்ப்பு கவசங்களை இது எளிதாகத் தகர்த்துச் செல்லும் என ரஷ்யா எச்சரித்துள்ளது.

சர்வதேச ரீதியில் பதற்றமான சூழல் நிலவி வரும் வேளையில், ரஷ்யாவின் இந்த ஏவுகணை சோதனை உலக நாடுகளிடையே பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

Radio