பலஸ்தீனர்களின் வீடுகள் மீது இஸ்ரேலிய குடியேற்றவாசிகள் தாக்குதல் !

மேற்குக்கரையில் உள்ள பலஸ்தீனர்களுக்கு சொந்தமான வீடுகள் மீது ஆயுதம் ஏந்திய இஸ்ரேலிய குடியேற்றவாசிகள் தாக்குதல் நடத்தியுள்ளனர்.
இதில் ஒரு பலஸ்தீன பிரஜை மற்றும் ஒரு வெளிநாட்டு ஆர்வலர் காயமடைந்துள்ளதாக தெரிவி;க்கப்பட்டுள்ளது.
மசாஃபர் யட்டா பகுதியில் உள்ள வீடு ஒன்றின் மீதே குடியேற்றவாசிகள் தாக்குதல் நடத்தினர்.
இதனையடுத்து, ரமல்லா நகருக்கு அருகிலுள்ள இந்த கிராமத்தில் புகுந்த இஸ்ரேலிய குடியேற்றவாசிகள், கண்ணீர்ப்புகை பிரயோகம் செய்ததுடன் தீப்பொறி விளக்குகளையும் வீசித் தாக்குதல் நடத்தினர்.
கெப்ரான் பகுதியில் நடத்தப்பட்ட கல்வீச்சுத் தாக்குதலில் ஒரு பலஸ்தீனருடன், அங்கிருந்த வெளிநாட்டு ஆர்வலர் ஒருவரும் காயமடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
மேற்குக்கரையில் பலஸ்தீனர்களுக்கு எதிராக இஸ்ரேலிய குடியேற்றவாசிகளால் முன்னெடுக்கப்படும் இத்தகைய வன்முறைகள் அண்மைக்காலமாக அதிகரித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.




