சீனா சென்ற ட்ரம்ப்பிற்கு உற்சாக வரவேற்பு!

உத்தியோகபூர்வ விஜயமாக சீனா
சென்ற அமெரிக்க ஜனாதிபதி
ட்ரம்ப்பிற்கு உற்சாக வரவேற்பளிக்கப்பட்டுள்ளது.
சீனாவுக்கான 2 நாட்கள் உத்தியோகப்பூர்வ விஜயம் மேற்கொண்டு அமெரிக்க ஜனாதிபதி நேற்று (13) பீஜிங்கை சென்றடைந்தார்.
அவருடன் அமெரிக்காவின் முக்கிய தொழில் அதிபர்களும் சீனா சென்றுள்ளனர்.
ஆப்பிள், டெஸ்லா மற்றும் போயிங் உள்ளிட்ட பிரபல நிறுவனங்களின் தலைமை நிறைவேற்று அதிகாரிகள் உள்ளிட்ட பல முக்கிய வர்த்தகத் தலைவர்கள் பெய்ஜிங்கைச் சென்றடைந்துள்ளனர்.




